கொளத்தூர் மெயிலுக்கு 'சிறந்த அமைப்பு விருது'

Super Wings Foundation Award


கொளத்தூர், லட்சுமிபுரத்தில் கடந்த 8 ஆண்டுகளாக கல்விப் பணியாற்றி வரும் நிறுவனம் சூப்பர் கிட்ஸ் ப்ளே ஸ்கூல் அண்ட் டே கேர் மற்றும் சூப்பர் அகாடமி டீச்சர்ஸ் டிரெயினிங். இந்நிறுவனம் சார்பில் கடந்த மே 25ம் தேதியன்று கொளத்தூர் ரெட்டேரியில் அமைந்துள்ள ஸ்ரீ இந்திராணி மகாலில் ‘ஐயாம் தி பெஸ்ட் அவார்ட் ஃபெஸ்ட் 2019’ எனும் மாணவர்களுக்கான பல்திறன் போட்டிகள் மற்றும் விருது விழா நடத்தப்பட்டது. இதில் இரண்டு வயது முதல் 20 வயது வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, வண்ணம் தீட்டுதல் மற்றும் மாறுவேட போட்டி நடத்தப்பட்டது.
 முதல் பரிசு பெற்றவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக தலா 600 ரூபாயும் மூன்றாம் பரிசாக தலா 300 ரூபாயும், சான்றிதழ், மற்றும் கேடயமும் பரிசளிக்கப்பட்டது. இந்த விழாவில் எவர்வின் பள்ளியின் தாளாளர் திரு பி. புருஷோத்தமன் அவர்களும் காரைக்குடி, ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளி செயலாளர் திருமதி ஸ்வேதா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.
இவ்விழாவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது திருமதி பிரேமலதா செல்வகுமார் அவர்களுக்கும், சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருது டாக்டர் உமாமகேஸ்வரி அவர்களுக்கும் மற்றும் சிறந்த அமைப்புக்கான விருது கொளத்தூர் மெயிலுக்கும் வழங்கப்பட்டது. 
இந்நிறுவனத்தின் முதல்வர், கவிஞர் மற்றும் பன்முகத்திறமையாளரான திருமதி பாரதி பத்மாவதி அடுத்த கட்டமாக உலக சாதனை விழாவை நடத்தவிருக்கிறார். 
அவருக்கு கொளத்தூர் மெயில் தனது வாழ்த்துக்களையும், சிறந்த அமைப்பிற்கான விருது தந்தமைக்கான நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.



படங்கள் : சூப்பர் விங்ஸ் பவுண்டேஷன்

Tags : Super WIngs Foundation Awards, Super Kids Playschool, Mrs.Bharathi Padmavathi, Mr.Purushothaman Everwin, Dr.Uma Maheshwari, Mrs.Premalatha Selvakumar, Mrs. Swetha- Karthikeyan School, Kolathur, Lakshmipuram, Kolathur Area News, Chennai Local NEwspaper