கொளத்தூரைச் சேர்ந்தவர்கள் இங்கு தாங்கள் வாழ்ந்த, வளர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. உங்களுக்கும் கொளத்தூருடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் பிணைப்பு இருக்கிறதா..? அதை நம் பகுதி மக்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமா..? கொளத்தூர் மெயிலை அழையுங்கள்!
நானும் கொளத்தூரும் 1
திரு.அழகப்பன், அழகு நிலைய உரிமையாளர்
சீனிவாசா நகர், கொளத்தூர்
நான் பிறந்த மண்ணான சிவகங்கை மாவட்டத்திலிருந்து சென்னைக்கு 1983ல் வந்தேன். அது முதல் 1988 வரை பெரம்பூரில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
செப்டெம்பர் 1988 முதல் டி.கே எதிரில் உள்ள புற்று நாகம்மன் கோவில் அருகே எனது முதல் அழகு நிலையத்தை துவக்கினேன்.
கடந்த 2000ம் ஆண்டு முதல் சீனிவாசா நகர் இரண்டாவது மெயின் ரோடில் இதோ இங்கே ஜெயம் அழகு நிலையம் நடத்தி வருகிறேன்.
கடந்த 27 வருடமாக இங்கு இருக்கிறேன். முன்பெல்லாம் நமது பகுதி இப்பொழுது உள்ளது போன்ற வசதிகள் பெற்றிருக்கவில்லை. சாலை போன்ற எந்தவிதமான வசதிகளும் இல்லாமல் இருந்தது.
எப்பொழுது 200 அடி ரோடு அமைந்ததோ அது முதல் கொஞ்சம் கொஞ்சமாக நம் பகுதி வளர்ச்சி அடையத் தொடங்கியது. தொழில் வளர்ச்சி சிறிது சிறிதாக பெருகியதும் குடியிருப்புகளும் முன்னை விட இப்பொழுது வெகுவாக அதிகரித்திருக்கிறது.
முன்பு தொன்னூறுகளில் 20எம் என்கிற ஒரேயொரு மினி பஸ் மட்டும் பாரீஸ் முதல் பூம்புகார் நகர் வரை வந்து செல்லும். அதை ஒப்பிடுகையில் இப்பொழுது போக்குவரத்து வசதிகள் பரவாயில்லை.
டிசம்பர் 2015 இதழில் வெளிவந்த கட்டுரை
tags : Srinivasa Nagar, Kolathur, Saloon, Interview, My Story, Nanum Kolathurum