ஆலயம் அறிவோம் - கன்னியம்மன் ஆலயம், சீனிவாசா நகர்




நமது கொளத்தூர் சீனிவாசா நகரில் அருள் பாலிக்கும் ஸ்ரீகன்னியம்மன் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் மகிழம் மரம் அடியில் அருவரமாக காட்சியளித்தவர். அப்பொழுதே அருகில் உள்ள மக்காரம் தோட்டத்தில் உள்ளவர்களுக்கு குலதெய்வமாக இருந்திருக்கிறார்.

அப்பொழுது பனை மரங்கள் சூழ கிராமணிகள்  வம்சத்தினர் வசம் இருந்தது இந்த இடம். திரு.முனுசாமி, திரு.தேவராஜிலு ஆகியோர்  கொளத்தூர் ஹவுசிங் சொசைட்டி என்று ஆரம்பித்து இந்த இடம் வாங்கப்பட்டு சீர்திருத்தி மனைப்பிரிவு ஒதுக்கப்பட்டது. 1964ம் வருடம் ஏப்ரல் மாதம் சீனிவாசா நகர் உருவாகியது. கோயிலுக்கு என்று ஒதுக்கிய இடத்தில் மகிழம் மர அடியில் சுயம்புவாக காட்சியளித்தார் கன்னியம்மன்.

1966ம் வருடத்தில் அப்பொழுது குடியேறிய திரு.சூரியபிரகாசம் நன்முயற்சியால் ஸ்ரீசப்த கன்னிமார்களுக்கு தென¢னை ஓலைகளால் உரை வேய்ந்து விளக்கேற்றி வழிபட்டார். அவருக¢கு உறுதுணையாக துணைவியார் திருமதி.காந்தம்மாள் மேலும் திருமதி.வசந்தம்மாள¢, திருமதி.புஷ்பம்மாள், திருமதி.சுசீலாபாபு என பலர் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர்.

ஸ்தல வரலாறு

இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீஸத்ய கன்னிமார்கள் மகிழமரத்தடியில் சுயம்புவாக தோன்றியுள்ளனர்.
அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் நடுவே புரதானமாக வீற்றிருப்பது ஸ்ரீ கமலக்கன்னி தேவியாரும் வலதுபுறத்தில் முறையே ஜலக்கன்னி, தாமரைக்கன்னி, இடும்பாசுர கன்னியும், இடது புறத்தில் முறையே பாலகன்னி, புஷ்பகன்னி, நாக கன்னியும் சுயம்புவாக தோன்றியுள்ளனர். இக்கோவில்  தலவிருட்சம் மகிழமரமாகும்.

மிகவும் பழமை வாய்ந்ததாக இருப்பதால் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே சுயம்புவாக வைத்துள்ளனர். இப்பொழுது சப்த கன்னிகளுக்கு வௌ¢ளிக் கவசம் மட்டும் சாத்தப்படுகிறது. சப்தகன்னிகளின் ருத்ரத்தை குறைக்கும் பொருட்டு ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்மனின் படம் பின்புறம் வைத்து சாந்தப்படுத்தியுள்ளனர்.

ஆலயத்தில் இடதுபுறம் ஸ்ரீ வெங்கடாசலபதியும் வலதுபுறத்தில் முருக பெருமானும் பிரதிஷ்டை செய்யப்பட்டு¢ள்ளது.
ஸ்ரீ சப்த கன்னியம்மன் சந்நிதி கிழக்கு முகமாக அமைந்துள்ளது. முதலில் சிமென்ட் கூரை போடப்பட்டுள்ளது. பிறகு ஆர்.சி.சி. கூரை போடப்பட்டது. சமயபுரம் இராமனாசுவாமி தலைமையில் முதல் கும்பாபிஷேகம் கடந்த 12.4.1987இல் நடைபெற்றது.

அதன்பிறகு இரண்டாவதாக 24.1.93 அன்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ முனிஸ்வரர், ஸ்ரீ நாகவல்லி அம்மன் வாகனங்கள் உரிய நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருவையாறு குருமூர்த்தி சாஸ்திரிகளால் மாண்புமிகு நீதிபதி திரு.பி.பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக  விழா நடைபெற்றது.
26.9.94 அன்று அருள்மிகு ஸ்ரீராஜ ராஜேஸ்வரி ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விழா நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சமேத அருள்மிகு மீனாட்சி அம்மன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்ரீ துர்க்கை அம்மன் திரு உருவ சிலைகள் பிரதிஷ்டை 29.4.1998 அன்று மாண்புமிகு நீதிபதி பி.பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது.

திருவிழா விபரங்கள்

ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று மட்டும் மாலை 6 மணி அளவில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் நன்கு அலங்கரிக்கப்பட்டு நான்கு வீதிகளிலும் பவனி வருதல் கண் கொள்ளாக் காட்சியாகும்.
2015 சித்ரா பௌர்ணமி முதல் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஸ்ரீ ஸத்திய நாராயணர் பூஜை மாலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அருள்மிகு ஸ்ரீ மீனாட்சிக்கும் ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கும் மதுரையில் நடைபெறும் அதே நாளன்று திருமண மஹோற்சவம் நடைபெற்று வருகிறது. பங்குனி உத்தரம் அன்று பூச்சொரிதல் அதை அடுத்து சித்திரையில் பால்குடம் எடுத்தல் நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்தில் புதுவருட பூஜை நடைபெறுகிறது.

சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், தேய்பிறை, அஷ்டமி, மூலம், திருவோணம், ஏகாதசி, முனிஸ்வரருக்கு சித்திரை மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெறுகிறது-.

நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்மனுக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பாக நடைபெறுகிறது.
பிரதி வௌ¢ளிக்கிழமைகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மாதர்களால் அபிஷேகம் செய்து ஆராதனை நடைபெற்று வருகிறது.
ஆடி மாதத்தில் 4வது வாரம் ஞாயிற்றுக்கிழமை கூழ்வார்த்தல் நடைபெறுகிறது.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு விசேஷ அலங்காரமும் நான்காவது வார சனிக்கிழமைகளில் பஜனையும் நடைபெறுகிறது.
2004ம் வருடம் செப்டம்பர் திங்கள் எல்லா மூர்த்திகளுக¢கும் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதுவரை நிர்வாக குழுவினரின் கீழ் கோயில் நடைபெற்று வந்தது.

2008ம் வருடம் முதல் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் அறக்கட்டளை என்ற பெயரில் திரு.வெங்கடபதி  செயலாளர், திரு.ஆர்.சீனிவாசன் தலைவர் ஆகியோரின் கீழ் செயல்பட்டு வந்தது. திரு.வெங்கடபதி இறைவன் அடி சேர்ந்த பிறகு திரு.சந்தான கிருஷ்ணன் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
இன்று நமது காவல் தெய்வமாக அருள் பாலிக்கும் நமது ஸ்ரீ கன்னியம்மன் கொளத்தூர் வாழ் மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் அருள் பொழிந்து வருகிறார்.

செங்கல்பட்டு அருகில் மணப்பாக்கம் ஸ்ரீ கன்னியம்மன், அடுத்த இரண்டாவது படைவீடாக கொளத்தூர் ஸ்ரீ கன்னியம்மனை வழிபடுவோம். எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ ஸ்ரீ கன்னியம்மன் அருளை வேண்டுகிறோம். நன்றி.


ஜுலை 2016 இதழில் வெளிவந்த கட்டுரை


கட்டுரையாளர் திரு.தாரகராமன், சீனிவாசா நகர்