நானும் கொளத்தூரும் 3 - திரு.சிவகுமார், சிவா சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்

கொளத்தூரைச் சேர்ந்தவர்கள் இங்கு தாங்கள் வாழ்ந்த, வளர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. உங்களுக்கும் கொளத்தூருடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் பிணைப்பு இருக்கிறதா..? அதை நம் பகுதி மக்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமா..? கொளத்தூர் மெயிலை  அழையுங்கள்!




நானும் கொளத்தூரும் 3 
திரு.சிவக்குமார், சிவா சூப்பர் மார்கெட் உரிமையாளர்
சீனிவாசா நகர், கொளத்தூர்



தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 1985ம் வருடம் சென்னைக்கு வந்தேன். இங்கு ராயபுரத்தில் உறவினர் ஒருவரது கடையில் நான்கு வருடங்கள் பணியாற்றினேன்.
பின்னர் 1989ம் வருடம் கொளத்தூரில் சிவா ஸ்டோர்ஸ் மளிகை கடையை சீனிவாசா நகரில் துவங்கினேன்.
அப்போது கடை வாடகை ரூ.50. கடையிலேயே உணவு சமைத்து அங்கேயே உறங்கி எழுந்து பணியாற்றிய நாட்கள் பசுமையானவை.
அந்த நிலையிலிருந்தது படிப்படியாக பால் வியாபாரம், அரிசி மண்டி, டிராவல்ஸ், சூப்பர் மார்க்கெட் என விஸ்தரித்துள்ளோம்.
1990ல் முதன்முதலாக ஹெரிடேஜ் பாலினை நமது பகுதிக்கு கொண்டு வந்தோம். அப்போது அரை லிட்டர் விலை ரூ.1.90 ஆக இருந்தது.
முன்பை விட கொளத்தூர் முன்னேறி இருந்தாலும் திருமலை நகரம் போன்ற கட்டமைப்பு  வசதிகளுடனும் சுகாதார வசதிகளுடனும் மேம்படுத்தப்பட்டால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்பது எனது ஆவலாக உள்ளது.
மேலும் நம் பகுதிக்கென அனைத்து வசதிகள் கொண்ட 24 மணி நேர அரசு மருத்துவமனை ஒன்று அமைந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தனியாளாக இங்கு வியாபாரத்தை துவக்கி இன்று சுமார் 30 பணியாளர்களுடன் வளர்ந்திருக்கும் இடம் என்கிற வகையில்  கொளத்தூருக்கு என் நெஞ்சில் என்றும் நீங்காத இடம் உண்டு!

பிப்ரவரி 2016 இதழில் வெளிவந்த கட்டுரை



tags : Srinivasa Nagar, Kolathur, Interview, My Story, Nanum Kolathurum, Siva Super Market, Srinivasa Nagar, Kolathur, Shiva Super Market, Siva Mega Market, Siva Stores