Kolathur Mail • June 2019 Issue • Epaper Version
பெண்கள் சிறுவர்களுக்கான யோகா மையம்
கொளத்தூர் சீனிவாசா நகரில் ஆனந்த் யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பிரத்யேக யோகா வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர், யோகா பயிற்றுனர் திருமதி.ஷைலஜா கூறும்பொழுது, “எங்களது யோகா பயிற்சி வகுப்புக்களின் மூலமாக கடந்த 8 மாதங்களில் பலர் இயற்கையான முறையில், பக்க விளைவுகள் இல்லாமல், உடல் எடை குறைப்பு உள்ளிட்ட ஆரோக்யமான பயன்களை அடைந்துள்ளனர். எங்களது மையத்தில் அனைத்து வயதினருக்கும் ஏற்றார் போல் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் பயிற்சி வகுப்புக்களும் மேற்கொள்ளப்படுகிறது. பல போட்டிகளில் பங்கேற்று கடந்த 6 மாதங்களில் பல்வேறு பரிசுகளையும் எங்கள் மையம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வகுப்பு நேரங்கள், யோகா பயிற்சி வகுப்பு குறித்த மேலும் தகவல்கள் பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.” என்றார்.
மேலும் விபரங்களுக்கு 98845 42008, 86101 62435
முத்தூட் சர்க்கரை பரிசு மேளா
![]() |
கடந்த ஜுன் 18ம் தேதியன்று பூம்புகார் நகர் மெயின் ரோடில் அமைந்துள்ள முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ‘சர்க்கரை அமோக பரிசு மேளா’ நடைபெற்றது. அன்றைய தினம் பதிவு செய்த முதல் 500 நபர்களுக்கு தலா 1 கிலோ சர்க்கரையும், அன்பளிப்பு கூப்பனும் வழங்கப்பட்டது. நம் பகுதி மக்கள் பலர் திரளாக இந்நிகழ்வில் பங்குபெற்று பயன்பெற்றனர்.
Muthoot Offer Day
Garbage Source Segregation Awareness Meeting
The meeting was well attended by Sri AV Surendiran, Convenor Joint Action Committee for North Villivakkam and Kolathur, Nagar Resident representatives.
Nearly 50 members attended the meeting. The Officials of Greater Chennai Corporation Zone 6 very well explained in detail the benefits of “Source Segregation” and requested the members present to convey the message to the residents for cooperation and implementation. They also answered the querries raised by the members present.
5th Anniversary of ‘I Support A Girl’ Initiative
5th anniversary function of ‘I Support A Girl’ program held on June 16th at Mohan Gardens, Korattur. ‘I Support A Girl’, ISAG is a piece of cake from CHILD home based on Madanankuppam near Kolathur, initiated in 2015.
“It has been a successful project for the past 4 years for 96 HIV stigmatized destitute girl children. This project mainly concentrates on children literacy, carrier guidance, moral support, life skill training, counselling and motivational support”, said one of the administrator. For more details readers may contact 9841656103, 8248226618.
Korattur Lake Restoration - Volunteers invited
Rotary club of Chennai Korattur jointly with Korattur Eri Protection group, kick started the Korattur lake restoration work by removing Karuvelam trees inside the lake as initial process on 9th June 2019. Rotary club of Chennai Korattur planned to raise the funds for this Noble cause and may seek from Rotary International too. Volunteers are requested to participate in this restoration work physically, financially as well as morally.
Interested readers may contact, Rtn Shanmuganathan 94440 11833, Rtn Kavitha Rammohan 80725 22973, Mr.Sekaran 98406 95674
New District President of Exnora invites representatives
Mr. A.V. Surendran, Convenor, Joint Action Committee for North Villivakkam and Kolathur has been nominated as the President for Chennai North West District - Exnora International (Villivakkam, Kolathur and Ambathur Constituencies). He said will attend all civic issues wherever possible and invites one representative in each area (nagar). Willing residents can contact him at 9444016323 and register.
His priorities are afforestation, planting saplings (in wide road sides, Schools, temples, parks and public places), garbage source segregation, beautification of streets with residents cooperation, compulsory RWH, pressurise the CMWSSB to have RWH in all street corners, deepening and clearing encroachments of lakes, maintenance of parks with all facilities, uplifting the downtrodden and their areas among others.
ஆலயம் அறிவோம் - கன்னியம்மன் ஆலயம், சீனிவாசா நகர்
நமது கொளத்தூர் சீனிவாசா நகரில் அருள் பாலிக்கும் ஸ்ரீகன்னியம்மன் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் மகிழம் மரம் அடியில் அருவரமாக காட்சியளித்தவர். அப்பொழுதே அருகில் உள்ள மக்காரம் தோட்டத்தில் உள்ளவர்களுக்கு குலதெய்வமாக இருந்திருக்கிறார்.
அப்பொழுது பனை மரங்கள் சூழ கிராமணிகள் வம்சத்தினர் வசம் இருந்தது இந்த இடம். திரு.முனுசாமி, திரு.தேவராஜிலு ஆகியோர் கொளத்தூர் ஹவுசிங் சொசைட்டி என்று ஆரம்பித்து இந்த இடம் வாங்கப்பட்டு சீர்திருத்தி மனைப்பிரிவு ஒதுக்கப்பட்டது. 1964ம் வருடம் ஏப்ரல் மாதம் சீனிவாசா நகர் உருவாகியது. கோயிலுக்கு என்று ஒதுக்கிய இடத்தில் மகிழம் மர அடியில் சுயம்புவாக காட்சியளித்தார் கன்னியம்மன்.
1966ம் வருடத்தில் அப்பொழுது குடியேறிய திரு.சூரியபிரகாசம் நன்முயற்சியால் ஸ்ரீசப்த கன்னிமார்களுக்கு தென¢னை ஓலைகளால் உரை வேய்ந்து விளக்கேற்றி வழிபட்டார். அவருக¢கு உறுதுணையாக துணைவியார் திருமதி.காந்தம்மாள் மேலும் திருமதி.வசந்தம்மாள¢, திருமதி.புஷ்பம்மாள், திருமதி.சுசீலாபாபு என பலர் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர்.
ஸ்தல வரலாறு
இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீஸத்ய கன்னிமார்கள் மகிழமரத்தடியில் சுயம்புவாக தோன்றியுள்ளனர்.
அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் நடுவே புரதானமாக வீற்றிருப்பது ஸ்ரீ கமலக்கன்னி தேவியாரும் வலதுபுறத்தில் முறையே ஜலக்கன்னி, தாமரைக்கன்னி, இடும்பாசுர கன்னியும், இடது புறத்தில் முறையே பாலகன்னி, புஷ்பகன்னி, நாக கன்னியும் சுயம்புவாக தோன்றியுள்ளனர். இக்கோவில் தலவிருட்சம் மகிழமரமாகும்.
மிகவும் பழமை வாய்ந்ததாக இருப்பதால் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே சுயம்புவாக வைத்துள்ளனர். இப்பொழுது சப்த கன்னிகளுக்கு வௌ¢ளிக் கவசம் மட்டும் சாத்தப்படுகிறது. சப்தகன்னிகளின் ருத்ரத்தை குறைக்கும் பொருட்டு ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்மனின் படம் பின்புறம் வைத்து சாந்தப்படுத்தியுள்ளனர்.
ஆலயத்தில் இடதுபுறம் ஸ்ரீ வெங்கடாசலபதியும் வலதுபுறத்தில் முருக பெருமானும் பிரதிஷ்டை செய்யப்பட்டு¢ள்ளது.
ஸ்ரீ சப்த கன்னியம்மன் சந்நிதி கிழக்கு முகமாக அமைந்துள்ளது. முதலில் சிமென்ட் கூரை போடப்பட்டுள்ளது. பிறகு ஆர்.சி.சி. கூரை போடப்பட்டது. சமயபுரம் இராமனாசுவாமி தலைமையில் முதல் கும்பாபிஷேகம் கடந்த 12.4.1987இல் நடைபெற்றது.
அதன்பிறகு இரண்டாவதாக 24.1.93 அன்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ முனிஸ்வரர், ஸ்ரீ நாகவல்லி அம்மன் வாகனங்கள் உரிய நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருவையாறு குருமூர்த்தி சாஸ்திரிகளால் மாண்புமிகு நீதிபதி திரு.பி.பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக விழா நடைபெற்றது.
26.9.94 அன்று அருள்மிகு ஸ்ரீராஜ ராஜேஸ்வரி ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விழா நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சமேத அருள்மிகு மீனாட்சி அம்மன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்ரீ துர்க்கை அம்மன் திரு உருவ சிலைகள் பிரதிஷ்டை 29.4.1998 அன்று மாண்புமிகு நீதிபதி பி.பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது.
திருவிழா விபரங்கள்
ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று மட்டும் மாலை 6 மணி அளவில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் நன்கு அலங்கரிக்கப்பட்டு நான்கு வீதிகளிலும் பவனி வருதல் கண் கொள்ளாக் காட்சியாகும்.
2015 சித்ரா பௌர்ணமி முதல் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஸ்ரீ ஸத்திய நாராயணர் பூஜை மாலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அருள்மிகு ஸ்ரீ மீனாட்சிக்கும் ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கும் மதுரையில் நடைபெறும் அதே நாளன்று திருமண மஹோற்சவம் நடைபெற்று வருகிறது. பங்குனி உத்தரம் அன்று பூச்சொரிதல் அதை அடுத்து சித்திரையில் பால்குடம் எடுத்தல் நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்தில் புதுவருட பூஜை நடைபெறுகிறது.
சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், தேய்பிறை, அஷ்டமி, மூலம், திருவோணம், ஏகாதசி, முனிஸ்வரருக்கு சித்திரை மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெறுகிறது-.
நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்மனுக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பாக நடைபெறுகிறது.
பிரதி வௌ¢ளிக்கிழமைகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மாதர்களால் அபிஷேகம் செய்து ஆராதனை நடைபெற்று வருகிறது.
ஆடி மாதத்தில் 4வது வாரம் ஞாயிற்றுக்கிழமை கூழ்வார்த்தல் நடைபெறுகிறது.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு விசேஷ அலங்காரமும் நான்காவது வார சனிக்கிழமைகளில் பஜனையும் நடைபெறுகிறது.
2004ம் வருடம் செப்டம்பர் திங்கள் எல்லா மூர்த்திகளுக¢கும் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதுவரை நிர்வாக குழுவினரின் கீழ் கோயில் நடைபெற்று வந்தது.
2008ம் வருடம் முதல் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் அறக்கட்டளை என்ற பெயரில் திரு.வெங்கடபதி செயலாளர், திரு.ஆர்.சீனிவாசன் தலைவர் ஆகியோரின் கீழ் செயல்பட்டு வந்தது. திரு.வெங்கடபதி இறைவன் அடி சேர்ந்த பிறகு திரு.சந்தான கிருஷ்ணன் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
இன்று நமது காவல் தெய்வமாக அருள் பாலிக்கும் நமது ஸ்ரீ கன்னியம்மன் கொளத்தூர் வாழ் மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் அருள் பொழிந்து வருகிறார்.
செங்கல்பட்டு அருகில் மணப்பாக்கம் ஸ்ரீ கன்னியம்மன், அடுத்த இரண்டாவது படைவீடாக கொளத்தூர் ஸ்ரீ கன்னியம்மனை வழிபடுவோம். எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ ஸ்ரீ கன்னியம்மன் அருளை வேண்டுகிறோம். நன்றி.
ஜுலை 2016 இதழில் வெளிவந்த கட்டுரை
கட்டுரையாளர் திரு.தாரகராமன், சீனிவாசா நகர்
ஆலயம் அறிவோம் - பவானியம்மன் ஆலயம், டீச்சர்ஸ் காலனி
அருள்மிகு பவானி அம்மன், அருள்மிகு காமாட்சி அம்பிகா உடனுறை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் நமது கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி, நான்காம் மனைப்பிரிவு பகுதியில் பஸ்நிலையம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும.
பழைய மற்றும் புதிய லட்சுமிபுரம் மக்கள், விவேகானந்தா நகர், ஹுசைன் காலனி மற்றும் அவற்றை சுற்றியுள்ள புதியதாக உருவாகியிருக்கும் நகர் மக்கள் பலருக்கும் இஷ்ட தெய்வமாக அருள்பாலித்து வருகிறது இத்திருக்கோயில்.
கடந்த 1985ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி சிறிய சன்னதியாக உருப்பெற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் உதவிக்கரம் நீட்டி இக்கோயிலின் நிர்வாகக் குழுவால் பல கட்டங்களில் திருப்பணிகள் நடைபெற்றன. 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற நிர்வாகக் குழுவால் இத்திருக்கோயில் ஆகமவிதிப்படி பல மாற்றங்களும், பல்வேறு சன்னதிகளும், மண்டபங்களும், பிரவார தெய்வங்களின் சன்னதிகளும், அருள்மிகு பவானி அம்மன் நுழைவு வாயிற்படிக்கு முன் துவார பாலக சக்திகளும் நுழைவு வாயிலின் மேற்புரம் கஜலட்சுமி திருவுருவமும் அமைக்கப்பெற்று, இக்கோயில் தற்சமயம் ஒரு கம்பீரத் தோற்றத்தை தருகிறது.
இத்திருப்பணிகள் அனைத்துமே அன்னை பவானி அம்மனின் அருளாசியால், இப்பிறவியின் பாக்கியமாகக் கொண்டு பல விதங்களில் உதவிய மெய்யடியர்களுக்கும், நிர்வாகக் குழுவுக்குமே தற்சமய கம்பீரத் தோற்றத்திற்கு காரணமானவர்கள் என்றால் அது மிகையாகாது.
ஸ்தலபுராணம்
கடந்த 20.01.1985 அமாவாசை ஞாயிறன்று வெளிப்புறத்தில் துப்புரவு செய்து கொண்டிருந்த சமயம் ஒரு நல்ல பாம்பு தோன்றி நெளிந்து நெளிந்து தற்போதுள்ள கோயில் இடத்தில் உள்ள கற்குவியலுக்குள் ஓடி ஒளிந்து விட்டது. நல்ல பாம்பை அடிப்பதற்காக முயற்சி செய்த போது, அவர்களுடன் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் அம்மன் அருள் வந்து ஆட ஆரம்பித்து, “நான் பவானி வந்திருக்கிறேன் என்னை அடிக்காதீர்கள் எனக்கு ஒரு இடம் அமைத்துக் கொடுங்கள், நான் இங்குள்ள அனைவரையும் பாதுகாத்து நன்றாக வாழ அருள்புரிகிறேன்” என்று அப்பெண்ணின் மூலமாக அருள்தந்து மறைந்து விட்டாள்.
இத்திருக்கோயிலில் அருள்மிகு பவானி அம்மனை பிரதிஷ்டை செய்வதற்கு முன் காஞ்சி மகாப் பெரியர்களிடமும் அருளாசி பெற்று, அவர் அனுப்பிவைத்த மடத்திலிருந்து வந்தவரின் ஆலோசனையுடன் அனேக பக்தர்களின் உதவியுடன் வேலைகளை நிறைவேற்றி, ஸ்வஸ்திஸ்ரீ பிரோஜ்பத்தி வருடம் சித்திரை மாதம் 22ம் நாள் ஞாயிற்றுக்கிழமை உத்திராடம் நட்சத்திரத்தில் (05.05.1991) காலை 10.30 மணிக்குமேல் 11.15 மணிக்குள் தெய்வங்கள் பிரதிஷ்டையும், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் அனைத்து பக்த கோடிகள் பிரார்த்தனையும் சிறப்பாக நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் உத்திராட நட்சத்திரதினத்தன்று அம்மன் வீதி உலா வந்து அனைவரையும் அருள் பாலித்து வருகிறாள். இது பத்து நாட்கள் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. அதே போன்று, தீபாவளிக்கு மறுநாள் பிரதமையிலிருந்து சஷ்டிவரை ஆறு நாட்களும் கந்த சஷ்டி விழாவும், 7ம் நாள் ஸ்ரீவள்ளி தேவயானை ஸமேத சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
11.07.1993 அன்று ஸ்ரீ ஆஞ்சநேயர், நவக்கிரகங்களுக்கு தனிச் சன்னதிகள் அமைந்து முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது. முதல் இரண்டு ஆண்டுகள் அம்மனை சூலத்தில் எழுந்தருளச் செய்து வீதி உலா நடைபெற்றது. மூன்றாம் ஆண்டு உற்சவமூர்த்திகள் செய்யப்பட்டு ஸ்வஸ்திஸ்ரீ பவ வருஷம் சித்திரை மாதம் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 24.04.1994 அன்று முறைப்படி யாகசாலை அமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
மங்களகரமான விரோத ஆண்டு ஆவணி 14ம் நாள் 30.08.2009 ஞாயிற்றுக்கிழமை வர்ண கலாபங்கள் சிற்ப சாஸ்திர சிவாகம முறைப்படி செய்யப்பட்டு ஜுரோணத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீபவானி அம்மனின் அருளால் காடாகக் கிடந்து சுற்றுப்புற இடங்கள் அனைத்தும் நகர்புறங்களாக மாறிவிட்டன என்றால் மிகையாகாது.
உள்ளும் புறமும் நமக்குத் துணையாக நிற்கும் ஆண்டவனின் பெருமை வாய்ந்த அதிலும் நமக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள அருள்மிகு பவானி அம்மன், அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரத் திருக்கோயிலைப் பற்றி, நான் எழுதியுள்ள இப்பகுதியை படிப்பவர்கள் அனைவரும் நல்லவனெல்லாம் பெறுவர் என்பது என் உறுதியான அசைக்க முடியாத நம்பிக்கை.
ஜுன் 2016 இதழில் வெளிவந்த கட்டுரை

கட்டுரையாளர் ஜோதிட சக்ரவர்த்தி நடேச நாராயணன்
நானும் கொளத்தூரும் 3 - திரு.சிவகுமார், சிவா சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்
கொளத்தூரைச் சேர்ந்தவர்கள் இங்கு தாங்கள் வாழ்ந்த, வளர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. உங்களுக்கும் கொளத்தூருடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் பிணைப்பு இருக்கிறதா..? அதை நம் பகுதி மக்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமா..? கொளத்தூர் மெயிலை அழையுங்கள்!
நானும் கொளத்தூரும் 3
திரு.சிவக்குமார், சிவா சூப்பர் மார்கெட் உரிமையாளர்
சீனிவாசா நகர், கொளத்தூர்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 1985ம் வருடம் சென்னைக்கு வந்தேன். இங்கு ராயபுரத்தில் உறவினர் ஒருவரது கடையில் நான்கு வருடங்கள் பணியாற்றினேன்.
பின்னர் 1989ம் வருடம் கொளத்தூரில் சிவா ஸ்டோர்ஸ் மளிகை கடையை சீனிவாசா நகரில் துவங்கினேன்.
அப்போது கடை வாடகை ரூ.50. கடையிலேயே உணவு சமைத்து அங்கேயே உறங்கி எழுந்து பணியாற்றிய நாட்கள் பசுமையானவை.
அந்த நிலையிலிருந்தது படிப்படியாக பால் வியாபாரம், அரிசி மண்டி, டிராவல்ஸ், சூப்பர் மார்க்கெட் என விஸ்தரித்துள்ளோம்.
1990ல் முதன்முதலாக ஹெரிடேஜ் பாலினை நமது பகுதிக்கு கொண்டு வந்தோம். அப்போது அரை லிட்டர் விலை ரூ.1.90 ஆக இருந்தது.
முன்பை விட கொளத்தூர் முன்னேறி இருந்தாலும் திருமலை நகரம் போன்ற கட்டமைப்பு வசதிகளுடனும் சுகாதார வசதிகளுடனும் மேம்படுத்தப்பட்டால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்பது எனது ஆவலாக உள்ளது.
மேலும் நம் பகுதிக்கென அனைத்து வசதிகள் கொண்ட 24 மணி நேர அரசு மருத்துவமனை ஒன்று அமைந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தனியாளாக இங்கு வியாபாரத்தை துவக்கி இன்று சுமார் 30 பணியாளர்களுடன் வளர்ந்திருக்கும் இடம் என்கிற வகையில் கொளத்தூருக்கு என் நெஞ்சில் என்றும் நீங்காத இடம் உண்டு!
பிப்ரவரி 2016 இதழில் வெளிவந்த கட்டுரை
tags : Srinivasa Nagar, Kolathur, Interview, My Story, Nanum Kolathurum, Siva Super Market, Srinivasa Nagar, Kolathur, Shiva Super Market, Siva Mega Market, Siva Stores
நானும் கொளத்தூரும் 2 - திரு.தாரகராமன், ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்
கொளத்தூரைச் சேர்ந்தவர்கள் இங்கு தாங்கள் வாழ்ந்த, வளர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. உங்களுக்கும் கொளத்தூருடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் பிணைப்பு இருக்கிறதா..? அதை நம் பகுதி மக்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமா..? கொளத்தூர் மெயிலை அழையுங்கள்!
நானும் கொளத்தூரும் 2
திரு.தாரகராமன், ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்
சீனிவாசா நகர், கொளத்தூர்
எனது 16வது வயதில், 1966ல் நாங்கள் பெரவள்ளூரில் இருந்து கொளத்தூர் சீனிவாசா நகருக்கு குடும்பத்துடன் வந்தோம். இங்கு நாங்கள் மூன்றாவது வீடு. இந்த பகுதி பனந்தோப்பாக அப்போது இருந்தது. பச்சையப்பன் கல்லூரி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்த பின்னர் 1970ல் போஸ்ட் ஆபிஸில் போஸ்ட் மேனாக பணியில் சேர்ந்தேன். தற்போது 2010ல் போஸ்ட் மாஸ்டராக பணி ஓய்வு பெற்று இலவச திருமண தகவல் மையம் ஒன்றை நடத்தி வருகிறேன். மேலும் சீனிவாசா நகரில் உள்ள கன்னியம்மன் கோவிலில் நிர்வாக குழுவில் உறுப்பினராக உள்ளேன்.
நான் குடியேறியபொழுது கொளத்தூர் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபொழுதுதான் சென்னை மாநகராட்சியுடன் நம் பகுதி இணைக்கப்பட்டது. அதற்கு முன்னர் ஊராட்சி ஒன்றியமாக இருந்தது. அப்பொழுது அமரர் ராகவன் நாயுடு (கங்கா தியேட்டர் உரிமையாளர்) தலைவராக இருந்தார்.
முன்னர் ஐசிஎப் பூம்புகார் நகர் வழியாக ஒரேயொரு பஸ் மட்டுமே இயங்கியது. போதுமான மருத்துவ வசதிகளும் அப்பொழுது கிடையாது. தற்போது நாதமுனி தியேட்டர் அருகேயிருக்கும் மருத்துவர் காந்திராஜ் மட்டுமே அப்பொழுது எங்களுக்கான டாக்டராக இருந்தார்.
முன்பு திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியாக இருந்தது, பின்னர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியாக மாறி தற்போது கொளத்தூர் தொகுதியாக உருப்பெற்று நல்ல நிலையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
1981ல் எனக்கு திருமணம் ஆனது. இப்பொழுது எனது மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன்கள் நல்ல நிலையில் இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளில் நல்ல வாழ்க்கையும் முன்னேறிய நிலையில் குடும்பமும் இருப்பதற்கு கொளத்தூரும் ஒரு காரணம்.
நகரின் பிற பகுதிகளை ஒப்பிடுகையில் நமது கொளத்தூரில் காணக்கிடைக்கும் அமைதியான சூழல் நமக்கு வரம் ஆகும்.
ஜனவரி 2016 இதழில் வெளிவந்த கட்டுரை
tags : Srinivasa Nagar, Kolathur, Saloon, Interview, My Story, Nanum Kolathurum
நானும் கொளத்தூரும் 1 - திரு.அழகப்பன், அழகு நிலைய உரிமையாளர்
கொளத்தூரைச் சேர்ந்தவர்கள் இங்கு தாங்கள் வாழ்ந்த, வளர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. உங்களுக்கும் கொளத்தூருடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் பிணைப்பு இருக்கிறதா..? அதை நம் பகுதி மக்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமா..? கொளத்தூர் மெயிலை அழையுங்கள்!
நானும் கொளத்தூரும் 1
திரு.அழகப்பன், அழகு நிலைய உரிமையாளர்
சீனிவாசா நகர், கொளத்தூர்
நான் பிறந்த மண்ணான சிவகங்கை மாவட்டத்திலிருந்து சென்னைக்கு 1983ல் வந்தேன். அது முதல் 1988 வரை பெரம்பூரில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
செப்டெம்பர் 1988 முதல் டி.கே எதிரில் உள்ள புற்று நாகம்மன் கோவில் அருகே எனது முதல் அழகு நிலையத்தை துவக்கினேன்.
கடந்த 2000ம் ஆண்டு முதல் சீனிவாசா நகர் இரண்டாவது மெயின் ரோடில் இதோ இங்கே ஜெயம் அழகு நிலையம் நடத்தி வருகிறேன்.
கடந்த 27 வருடமாக இங்கு இருக்கிறேன். முன்பெல்லாம் நமது பகுதி இப்பொழுது உள்ளது போன்ற வசதிகள் பெற்றிருக்கவில்லை. சாலை போன்ற எந்தவிதமான வசதிகளும் இல்லாமல் இருந்தது.
எப்பொழுது 200 அடி ரோடு அமைந்ததோ அது முதல் கொஞ்சம் கொஞ்சமாக நம் பகுதி வளர்ச்சி அடையத் தொடங்கியது. தொழில் வளர்ச்சி சிறிது சிறிதாக பெருகியதும் குடியிருப்புகளும் முன்னை விட இப்பொழுது வெகுவாக அதிகரித்திருக்கிறது.
முன்பு தொன்னூறுகளில் 20எம் என்கிற ஒரேயொரு மினி பஸ் மட்டும் பாரீஸ் முதல் பூம்புகார் நகர் வரை வந்து செல்லும். அதை ஒப்பிடுகையில் இப்பொழுது போக்குவரத்து வசதிகள் பரவாயில்லை.
டிசம்பர் 2015 இதழில் வெளிவந்த கட்டுரை
tags : Srinivasa Nagar, Kolathur, Saloon, Interview, My Story, Nanum Kolathurum
அசத்தும் மோர் கடை
குமரன் நகர் அருகே புதியதாக உதயமாகி இருக்கும் இந்த மோர் கடை சுவையில் புதுமை செய்வது மட்டுமல்லாது கடை அலங்காரத்திலேயும் கண்களுக்கும் ஜில்லென்று இருக்கிறது. சிறிய இடத்திலேயே பளிச்சென்ற பிராண்டிங்கோடு நிற்கும் இதனை துவக்கியிருப்பவர் இளைஞர் திரு.வினோத். போட்டோகிராபரான இவர் படிப்படியாக முன்னேறி காபி ஷாப் மாடலில் மோர் கடைகளை துவக்குவது தனது கனவென குறிப்பிட்டார். இருக்கும் வாய்ப்புகளை வைத்து சிறப்பாக என்ன செய்வது என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது இந்தக் கடை. மனமிருந்தால் மார்க்கமுண்டு!
Tags : Buttermilk Shop at Kumaran Nagar, Kolathur, Kolathur Mail, Kolathur Times, Local News
வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி
Tags : North Chennai, Dr.Kalanithi Veerasami, Vote of Thanks, Voters, Eleciton 2019, Chennai, Kolathur
கொளத்தூர் மெயிலுக்கு 'சிறந்த அமைப்பு விருது'
Super Wings Foundation Award
கொளத்தூர், லட்சுமிபுரத்தில் கடந்த 8 ஆண்டுகளாக கல்விப் பணியாற்றி வரும் நிறுவனம் சூப்பர் கிட்ஸ் ப்ளே ஸ்கூல் அண்ட் டே கேர் மற்றும் சூப்பர் அகாடமி டீச்சர்ஸ் டிரெயினிங். இந்நிறுவனம் சார்பில் கடந்த மே 25ம் தேதியன்று கொளத்தூர் ரெட்டேரியில் அமைந்துள்ள ஸ்ரீ இந்திராணி மகாலில் ‘ஐயாம் தி பெஸ்ட் அவார்ட் ஃபெஸ்ட் 2019’ எனும் மாணவர்களுக்கான பல்திறன் போட்டிகள் மற்றும் விருது விழா நடத்தப்பட்டது. இதில் இரண்டு வயது முதல் 20 வயது வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, வண்ணம் தீட்டுதல் மற்றும் மாறுவேட போட்டி நடத்தப்பட்டது.
முதல் பரிசு பெற்றவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக தலா 600 ரூபாயும் மூன்றாம் பரிசாக தலா 300 ரூபாயும், சான்றிதழ், மற்றும் கேடயமும் பரிசளிக்கப்பட்டது. இந்த விழாவில் எவர்வின் பள்ளியின் தாளாளர் திரு பி. புருஷோத்தமன் அவர்களும் காரைக்குடி, ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளி செயலாளர் திருமதி ஸ்வேதா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.
இவ்விழாவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது திருமதி பிரேமலதா செல்வகுமார் அவர்களுக்கும், சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருது டாக்டர் உமாமகேஸ்வரி அவர்களுக்கும் மற்றும் சிறந்த அமைப்புக்கான விருது கொளத்தூர் மெயிலுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் முதல்வர், கவிஞர் மற்றும் பன்முகத்திறமையாளரான திருமதி பாரதி பத்மாவதி அடுத்த கட்டமாக உலக சாதனை விழாவை நடத்தவிருக்கிறார்.
அவருக்கு கொளத்தூர் மெயில் தனது வாழ்த்துக்களையும், சிறந்த அமைப்பிற்கான விருது தந்தமைக்கான நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.
படங்கள் : சூப்பர் விங்ஸ் பவுண்டேஷன்
Tags : Super WIngs Foundation Awards, Super Kids Playschool, Mrs.Bharathi Padmavathi, Mr.Purushothaman Everwin, Dr.Uma Maheshwari, Mrs.Premalatha Selvakumar, Mrs. Swetha- Karthikeyan School, Kolathur, Lakshmipuram, Kolathur Area News, Chennai Local NEwspaper
பெரியார் நகரில் ரமலான் சிறப்பு தொழுகை
பெரியார் நகர் கென்னடி தெருவில் உள்ள ரேடியேன்ஸ் பள்ளி வளாகத்தில், நபி வழித் திடலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடசென்னை மாவட்டம் பெரியார் நகர் கிளையின் சார்பில் கிளைத்தலைவர் அ.ரஹ்மான் தலைமையில் செயலாளர் அப்துர் ரஹீம், பொருளாளர் அசன் துணைத் தலைவர் அபு, துணைச் செயலாளர் பிலால், முன்னிலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் கொளத்தூர் நிஜாம் அவர்கள் 'ரமலான் தரும் படிப்பினை' என்ற தலைப்பில் உரையாற்றினார். மற்றும் ஏராளமான முஸ்லீம் சகோதரர்கள் சகோதரிகள் கலந்து கொண்டனர்.
செய்திக்குறிப்பு, படங்கள்: திரு.அசன்
Tamil Nadu Thowheed Jamath Periyar Nagar
Subscribe to:
Posts (Atom)