நானும் கொளத்தூரும் 1 - திரு.அழகப்பன், அழகு நிலைய உரிமையாளர்

கொளத்தூரைச் சேர்ந்தவர்கள் இங்கு தாங்கள் வாழ்ந்த, வளர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. உங்களுக்கும் கொளத்தூருடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் பிணைப்பு இருக்கிறதா..? அதை நம் பகுதி மக்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமா..? கொளத்தூர் மெயிலை  அழையுங்கள்!



நானும் கொளத்தூரும் 1 
திரு.அழகப்பன், அழகு நிலைய உரிமையாளர்
சீனிவாசா நகர், கொளத்தூர்


நான் பிறந்த மண்ணான சிவகங்கை மாவட்டத்திலிருந்து சென்னைக்கு 1983ல் வந்தேன். அது முதல் 1988 வரை பெரம்பூரில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
செப்டெம்பர் 1988 முதல் டி.கே எதிரில் உள்ள புற்று நாகம்மன் கோவில் அருகே எனது முதல் அழகு நிலையத்தை துவக்கினேன்.
கடந்த 2000ம் ஆண்டு முதல் சீனிவாசா நகர் இரண்டாவது மெயின் ரோடில் இதோ இங்கே ஜெயம் அழகு நிலையம் நடத்தி வருகிறேன்.
கடந்த 27 வருடமாக இங்கு இருக்கிறேன். முன்பெல்லாம் நமது பகுதி இப்பொழுது உள்ளது போன்ற வசதிகள்  பெற்றிருக்கவில்லை. சாலை போன்ற எந்தவிதமான வசதிகளும் இல்லாமல் இருந்தது.
எப்பொழுது 200 அடி ரோடு அமைந்ததோ அது முதல் கொஞ்சம் கொஞ்சமாக நம் பகுதி வளர்ச்சி அடையத் தொடங்கியது.  தொழில் வளர்ச்சி சிறிது சிறிதாக பெருகியதும்  குடியிருப்புகளும் முன்னை விட இப்பொழுது வெகுவாக அதிகரித்திருக்கிறது.
முன்பு தொன்னூறுகளில் 20எம் என்கிற ஒரேயொரு மினி பஸ் மட்டும் பாரீஸ் முதல் பூம்புகார் நகர் வரை வந்து செல்லும். அதை ஒப்பிடுகையில் இப்பொழுது போக்குவரத்து வசதிகள் பரவாயில்லை.


டிசம்பர் 2015 இதழில் வெளிவந்த கட்டுரை


tags : Srinivasa Nagar, Kolathur, Saloon, Interview, My Story, Nanum Kolathurum

அசத்தும் மோர் கடை




குமரன் நகர் அருகே புதியதாக உதயமாகி இருக்கும் இந்த மோர் கடை சுவையில் புதுமை செய்வது மட்டுமல்லாது கடை அலங்காரத்திலேயும் கண்களுக்கும் ஜில்லென்று இருக்கிறது. சிறிய இடத்திலேயே பளிச்சென்ற பிராண்டிங்கோடு நிற்கும் இதனை துவக்கியிருப்பவர் இளைஞர் திரு.வினோத். போட்டோகிராபரான இவர் படிப்படியாக முன்னேறி காபி ஷாப் மாடலில் மோர் கடைகளை துவக்குவது தனது கனவென குறிப்பிட்டார். இருக்கும் வாய்ப்புகளை வைத்து சிறப்பாக என்ன செய்வது என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது இந்தக் கடை. மனமிருந்தால் மார்க்கமுண்டு!

Tags : Buttermilk Shop at Kumaran Nagar, Kolathur, Kolathur Mail, Kolathur Times, Local News

வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி



வடசென்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள  தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி, கடந்த மே 29ம் தேதியன்று கொளத்தூர் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

Tags : North Chennai, Dr.Kalanithi Veerasami, Vote of Thanks, Voters, Eleciton 2019, Chennai, Kolathur

கொளத்தூர் மெயிலுக்கு 'சிறந்த அமைப்பு விருது'

Super Wings Foundation Award


கொளத்தூர், லட்சுமிபுரத்தில் கடந்த 8 ஆண்டுகளாக கல்விப் பணியாற்றி வரும் நிறுவனம் சூப்பர் கிட்ஸ் ப்ளே ஸ்கூல் அண்ட் டே கேர் மற்றும் சூப்பர் அகாடமி டீச்சர்ஸ் டிரெயினிங். இந்நிறுவனம் சார்பில் கடந்த மே 25ம் தேதியன்று கொளத்தூர் ரெட்டேரியில் அமைந்துள்ள ஸ்ரீ இந்திராணி மகாலில் ‘ஐயாம் தி பெஸ்ட் அவார்ட் ஃபெஸ்ட் 2019’ எனும் மாணவர்களுக்கான பல்திறன் போட்டிகள் மற்றும் விருது விழா நடத்தப்பட்டது. இதில் இரண்டு வயது முதல் 20 வயது வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, வண்ணம் தீட்டுதல் மற்றும் மாறுவேட போட்டி நடத்தப்பட்டது.
 முதல் பரிசு பெற்றவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக தலா 600 ரூபாயும் மூன்றாம் பரிசாக தலா 300 ரூபாயும், சான்றிதழ், மற்றும் கேடயமும் பரிசளிக்கப்பட்டது. இந்த விழாவில் எவர்வின் பள்ளியின் தாளாளர் திரு பி. புருஷோத்தமன் அவர்களும் காரைக்குடி, ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளி செயலாளர் திருமதி ஸ்வேதா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.
இவ்விழாவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது திருமதி பிரேமலதா செல்வகுமார் அவர்களுக்கும், சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருது டாக்டர் உமாமகேஸ்வரி அவர்களுக்கும் மற்றும் சிறந்த அமைப்புக்கான விருது கொளத்தூர் மெயிலுக்கும் வழங்கப்பட்டது. 
இந்நிறுவனத்தின் முதல்வர், கவிஞர் மற்றும் பன்முகத்திறமையாளரான திருமதி பாரதி பத்மாவதி அடுத்த கட்டமாக உலக சாதனை விழாவை நடத்தவிருக்கிறார். 
அவருக்கு கொளத்தூர் மெயில் தனது வாழ்த்துக்களையும், சிறந்த அமைப்பிற்கான விருது தந்தமைக்கான நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.



படங்கள் : சூப்பர் விங்ஸ் பவுண்டேஷன்

Tags : Super WIngs Foundation Awards, Super Kids Playschool, Mrs.Bharathi Padmavathi, Mr.Purushothaman Everwin, Dr.Uma Maheshwari, Mrs.Premalatha Selvakumar, Mrs. Swetha- Karthikeyan School, Kolathur, Lakshmipuram, Kolathur Area News, Chennai Local NEwspaper

பெரியார் நகரில் ரமலான் சிறப்பு தொழுகை

 Ramzan




பெரியார் நகர் கென்னடி தெருவில் உள்ள ரேடியேன்ஸ் பள்ளி வளாகத்தில், நபி வழித் திடலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடசென்னை மாவட்டம் பெரியார் நகர் கிளையின் சார்பில் கிளைத்தலைவர் அ.ரஹ்மான் தலைமையில் செயலாளர் அப்துர் ரஹீம், பொருளாளர் அசன் துணைத் தலைவர் அபு, துணைச் செயலாளர் பிலால், முன்னிலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் கொளத்தூர் நிஜாம் அவர்கள் 'ரமலான் தரும் படிப்பினை' என்ற தலைப்பில் உரையாற்றினார். மற்றும் ஏராளமான முஸ்லீம் சகோதரர்கள் சகோதரிகள் கலந்து கொண்டனர்.
  



செய்திக்குறிப்பு, படங்கள்: திரு.அசன்

Tags : Ramzan Special Prayer, Periyar Nagar, 

Tamil Nadu Thowheed Jamath Periyar Nagar



June 2019 - Epaper



Kolathur Mail • June 2019 Issue • Epaper Version

June 2019 - Mpaper



Kolathur Mail • June 2019 Issue • Mpaper Version

Election Contest 2019

Kolathur Mail - Skyline - Megabites 
Election Contest 2019



May 2019 - Epaper



Kolathur Mail • May 2019 Issue • Epaper Version

May 2019 - Mpaper



Kolathur Mail • May 2019 Issue • Mpaper Version