கொளத்தூர் ஸ்ரீவேல்முருகன் ஆலயத்தில் மஹா கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாண வைபவம்

 


கொளத்தூர், விவேக் நகரில் உள்ள ஸ்ரீவேல்முருகன் ஆலயத்தில் மஹா கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் திருக்கல்யாண வைபவம் நடைபெற இருக்கிறது.  வரும் சனிக்கிழமை 02.11.2024 அன்று மஹா கந்தசஷ்டி ஆரம்பம், கந்த சஷ்டியை முன்னிட்டு 6 நாட்கள் தினமும் காலை 7.30 மணிக்கு மஹா அபிஷேகம் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்

02.11.2024
காலை 7 மணிக்கு பந்தகால் 
மாலை 5 மணிக்கு கொளத்தூர் சஹஸ்ர நாம மண்டலி குழுவினரின் திருப்புகழ் நிகழ்ச்சி

03.11.2024
வேல்மாறல்

04.11.2024
கந்தகுரு கவசம்

05.11.2024
இசைவல்லுனர் டி.ஏ.எஸ். தக்கேசி அவர்களின் மாணவ மாணவிகளின் குழுவினர்களால் சங்கீத பக்தி பாடல் இசைநிகழ்ச்சி நடைபெறும்

06.11.2024
முருகன் பக்தி பாடல்கள்

07.11.2024
காலை 8 மணி முதல் 11 மணி வரை லட்ச்சார்ச்சனை
மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம்

08.11.2024
மாலை 5 மணி திருக்கல்யாண வைபவம்

தொடர்புக்கு
ஆலய நிர்வாகம்
9840307681

Kolathur Mail - Oct 2023 Epaper

KM - Epaper - Sep 22


Kolathur Mail • October  2023 Issue • Epaper Version

Shop for Super Deals at Amazon.in  https://amzn.to/3rO0gFX



KM - Oct 2022 - Epaper

KM - Epaper - Sep 22


Kolathur Mail • October  2022 Issue • Epaper Version

Shop for Super Deals at Amazon.in  https://amzn.to/3rO0gFX



கொளத்தூரில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி

 










 கொளத்தூர் பூம்புகார் நகரில் இயங்கி வரும் ஆண்டன் பவுன்டேசன் நிறுவனம் பெருநகர சென்னை காவல்துறையுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதி ஏற்பு இணைய வழி கையெழுத்துப் பிரச்சார நிகழ்வினை கொளத்தூர் மூகாம்பிகை சந்திப்பில் நடத்தினர். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் ஆண்டன் பவுன்டேசன் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்திக்குறிப்பு படங்கள் 
ஆண்டன் பவுன்டேசன், கொளத்தூர்


Anti Drug Signature Campaign at Kolathur by Anton Foundation & Greater Chennai City Police




செந்தில் நகர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை








கொளத்தூர் செந்தில் நகர் 3வது மெயின் ரோட்டில் உள்ள தெருவிளக்குகள் சரியாக இயங்காததாலும், மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் சரிவர முடிக்கப்படாமல் உள்ளதாலும் மினி பேருந்துகள், வியாபாரிகள் மற்றும்  பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றார்கள். ஆகவே அப் பணிகளை விரைந்து செயல்பட்டு முடித்துத் தருமாறு பெருநகர சென்னை மாநகராட்சி கண்டித்து இன்று காலை செந்தில் நகர் சிக்னல் அருகில் செந்தில் நகர் மற்றும் 200 அடி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வில்லிவாக்கம் அசிஸ்டன்ட் கமிஷனர் மற்றும் ராஜமங்கலம் ஆய்வாளர்,  வியாபாரிகளையும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதால்  நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை விலக்கிக் கொள்வதாக செந்தில் நகர் மற்றும் 200 அடி அனைத்து வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

படங்கள் : செந்தில் நகர் மற்றும் 200 அடி அனைத்து வியாபாரிகள் சங்கம்

Kolathur Mail - April 2022 - Print Edition

KM - Mpaper - April 22


Kolathur Mail • April 2022 Issue • Epaper Version

Shop for Super Deals at Amazon.in  https://amzn.to/3rO0gFX



Kolathur Mail - March 2022 - Print Edition

KM - Mpaper - Oct 20


Kolathur Mail • March 2022 Issue • Epaper Version


  • Click the arrow icon in right top corner to view full screen
  • Optimised for mobile viewing - Electronic version of printed copy
  • Contact for advertisement 99624 55494



கொளத்தூர் கதைகள் - கலா ஹோம் மேட் ஃபுட்ஸ்






கொளத்தூர் மெயில் வாசகர்களுக்கு வணக்கம். என் பெயர் சந்திரகலா. நான் இங்கு கொளத்தூரில் கலா ஹோம் மேட் ஃபுட்ஸ் இனிப்பு மற்றும் கார வணிகம் நடத்தி வருகிறேன். 

2017ல் துவங்கினோம். இப்பொழுது கொளத்தூர் மட்டும் அல்லாது சுற்றுவட்டார பகுதி மக்களையும் சென்றடைந்திருக்கிறோம். எங்களுடைய தனித்தன்மை, நாங்கள் டால்டா மற்றும் பிரசர்வேட்டிவ்ஸ் இல்லாமல் ஸ்வீட்ஸ் மற்றும் காரம் தயார் செய்து தருகிறோம். 

நான் படித்ததும் என்னுடைய தற்போதைய பணிசூழலும் வித்தியாசமானதாக இருக்கும். பி.ஏ.பி.எட் மற்றும் எம்.சி.ஏ படித்திருக்கிறேன். பிறகு ஆசிரியராக பணியாற்றியிருக்கிறேன். 

 மார்கெட்டிங் பிரிவில் அடிப்படை பணியாளராக துவங்கி மேலாளர் நிலை வரை 10 வருடங்கள் பணி புரிந்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் குழந்தை காரணமாக தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழல் நேரிட்டது. மேலும் குழந்தைக்காக வீட்டிலேயே ஆரோக்யமான, சுவையான உணவு வகைகளை தயாரிப்பதில் எனக்கு தனி ஆர்வம் பிறந்தது. 

அப்படி பலவற்றை முயன்று பார்த்த பொழுது ஆச்சரியப்படத்தக்க வகையில் பல்வேறு விதமான சுவைகளில் தரமான இனிப்பு கார வகைகளை செய்ய முடிந்தது. இதனைப் பார்த்த உறவினர்கள் நண்பர்கள், இவ்வளவு சுவையாக செய்கிறாயே .. இதனை வியாபாரமாக ஏன் துவங்க கூடாது என ஊக்கப்படுத்தினார்கள். 



என்னால் தனியாக ஒரு உணவு வியாபாரத்தை செய்ய முடியும் என தன்னம்பிக்கையும் சேர்ந்து கொள்ள அப்பொழுது பிறந்தது கலா ஹோம் மேட் ஃபுட்ஸ். 

அதன் பிறகு வீட்டிலேயே துவங்கி பிறகு கடை மற்றும் உற்பத்தி பிரிவு முதலியவை துவங்கினேன். எங்களிடம் வட இந்திய, தென்னிந்திய, பெங்கால் வகை இனிப்புகளும், பாரம்பரிய இனிப்புகளான முறுக்கு, சீடை, அதிரசம் போன்றவையும், காரத்தில் மிக்சர், சேவ் வகைகள் அனைத்தும் செய்து தருகிறோம்.

மைசூர் பாக்கிலேயே சப்போட்டா மைசூர் பாக், நெய் மைசூர் பாக், கேரட் மைசூர் பாக் முதலிய மூன்று நான்கு வகைகள் செய்கிறோம். 
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நாங்கள் சப்ளை செய்கிறோம். நீங்கள் ஆன்லைனிலும் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோவிலும் ஆர்டர் செய்யலாம். 

கலா ஹோம் மேட்ஸ் ஃபுட்
எண் : 78239 89073



கொளத்தூர் கதைகள் - மனிதம் மதிப்போம் அர்ச்சனா






கொளத்தூர் மெயில் வாசகர்களுக்கு வணக்கம். என் பெயர் அர்ச்சனா. வில்லிவாக்கத்தில் பிறந்து வளர்ந்தேன். சிறு வயதில் முதல் நான் கஷ்டப்பட்டு வளர்ந்த காரணத்தால், இன்று பிறருக்கு உதவும் நோக்கில் மனிதம் மதிப்போம் எனும் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து அதன் மூலமாக சாலையோரம் காணப்படும் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர்களுக்கு, முதியவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தினம்தோறும் சுமார் 150 பேருக்கு மதிய உணவு அளித்து வருகிறோம். உணவுகளை நான் மற்றும் எனது தோழிகள் கனிமொழி, பவித்ரா மூன்று பேர் மட்டும் நேரடியாக வினியோகம் செய்கிறோம்.



சாம்பார் சாதம், தக்காளி சாதம், புளிசாதம் போன்ற கலந்த சாதங்களும் சில வேளை குழம்புடன் கூடிய சாதங்களும் வழங்குகிறோம். நமது வீட்டில் எப்படி செய்து தருவோமோ அதே போல சுகாதாரமான முறையிலும், அன்றன்று காய்கறிகள் வாங்கி செய்தும் உணவுகளை சமைக்கிறோம். வில்லிவாக்கம் இ.சி.ஐ சர்ச் அருகில் நமது இடத்தில் சமையல் பணிகளை மேற்கொள்கிறோம். 

இதனையடுத்து ஆதரவற்ற குழந்தைகளுக்காக திருநின்றவூரில் நத்தம்மேடு என்கிற பகுதியில் எனது சொந்த இடத்தில், குழந்தைகளுக்காக  அறத்தின் அகம் என்றொரு இல்லம் எழுப்பி அதில் அவர்களுக்கு தேவையான வற்றை செய்து தந்து அவர்களைப் பார்த்துக் கொள்ளலாம் என பணிகளை மேற்கொண்டு வருகிறேன். 


இதற்கு என்னுடைய பொன், பொருள் அனைத்தையும் செலவு செய்தது மட்டும் அல்லாமல் பலருடைய பங்களிப்பினாலும் இதனை செய்து வருகிறேன்.  நீங்களும் இதற்கு உதவ விரும்பினால் செய்யலாம். உங்களது ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். 

எப்பொழுதுமே நாங்கள் வெளிப்படையாக இயங்கி வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் உதவியின் தகவல்கள், செய்யும் பணிகளை வீடியோக்கள் வடிவில் சமூக ஊடக தளங்களில் உடனுக்குடன் பதிவிட்டு வருகிறோம். இதனைப் பார்த்து வில்லிவாக்கம் மட்டும் அல்லாது உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் உதவியும் தொடர்ந்து எங்கள் அறக்கட்டளைக்கு கிடைத்து வருகிறது. 


முதலில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் உணவு தரலாம் என 2017ல் ஆரம்பித்தோம். பிறகு  2018ல் இருந்து தொடர்ந்து அனைத்து நாட்களும் தந்து கொண்டிருக்கிறோம். 150 முதல் 1000 நபர்கள் வரை நாங்கள் உணவு தருகிறோம். பண்டிகைக்காலங்களில் பிறர் உதவிகளின் மூலம் துணிகள், போர்வைகள் போன்றவற்றையும் வழங்கி வருகிறோம்.

நான் பத்தாவது படிக்கும்பொழுது தந்தை கேன்சர் நோய் பாதிப்பால் இறந்து விட்டார். பிறகு அம்மா பட்ட கஷ்டங்கள் ஏராளம். நான்  அப்பொழுது சரிவர உணவு இல்லாமல், உறைவிடம், உடை இல்லாமல் பட்ட சிரமங்களை மனதில் கொண்டு இப்பணிகளை மேற்கொண்டு வருகிறேன். இப்பொழுது எனது பிசினஸில் கிடைக்கும் பணம் உட்பட பிறர் உதவிகளையும் சேர்த்து என்னால் இயன்றவற்றை செய்து வருகிறேன். 

எனது இந்தப் பணியில் எனக்கு துணையாக இருப்பது பவித்ரா, கனிமொழி எனும் தோழிகள் ஆவர். நான் படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு மாபெரும் துணையாகவும் உதவிகளும் செய்த வந்த இவர்கள் இன்று இந்த அறக்கட்டளையிலும் தூணாக துணையாக விளங்குகிறார்கள்.

நல்ல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடவுள் நம்மை கைவிடமாட்டார் என்பதற்கு இதுவே சான்று. நமது எண்ணங்களும் செயல்களும் சரியானதாக இருந்தால் நாம் வாழ்வில் வெற்றி பெறுவோம் என தெரிவித்துக் கொள்கிறோம்.














தொடர்புக்கு :








Kolathur Mail - Digital Edition - 06 02 2022

KM - Mpaper - Oct 20


Kolathur Mail • Digital Paper - 06 02 2022

Click top right arrow to view full page







Cover Story : Mr.R.Sukumar NCA Cricket Coach, Cricketer