கொளத்தூர் கதைகள் - கலா ஹோம் மேட் ஃபுட்ஸ்






கொளத்தூர் மெயில் வாசகர்களுக்கு வணக்கம். என் பெயர் சந்திரகலா. நான் இங்கு கொளத்தூரில் கலா ஹோம் மேட் ஃபுட்ஸ் இனிப்பு மற்றும் கார வணிகம் நடத்தி வருகிறேன். 

2017ல் துவங்கினோம். இப்பொழுது கொளத்தூர் மட்டும் அல்லாது சுற்றுவட்டார பகுதி மக்களையும் சென்றடைந்திருக்கிறோம். எங்களுடைய தனித்தன்மை, நாங்கள் டால்டா மற்றும் பிரசர்வேட்டிவ்ஸ் இல்லாமல் ஸ்வீட்ஸ் மற்றும் காரம் தயார் செய்து தருகிறோம். 

நான் படித்ததும் என்னுடைய தற்போதைய பணிசூழலும் வித்தியாசமானதாக இருக்கும். பி.ஏ.பி.எட் மற்றும் எம்.சி.ஏ படித்திருக்கிறேன். பிறகு ஆசிரியராக பணியாற்றியிருக்கிறேன். 

 மார்கெட்டிங் பிரிவில் அடிப்படை பணியாளராக துவங்கி மேலாளர் நிலை வரை 10 வருடங்கள் பணி புரிந்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் குழந்தை காரணமாக தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழல் நேரிட்டது. மேலும் குழந்தைக்காக வீட்டிலேயே ஆரோக்யமான, சுவையான உணவு வகைகளை தயாரிப்பதில் எனக்கு தனி ஆர்வம் பிறந்தது. 

அப்படி பலவற்றை முயன்று பார்த்த பொழுது ஆச்சரியப்படத்தக்க வகையில் பல்வேறு விதமான சுவைகளில் தரமான இனிப்பு கார வகைகளை செய்ய முடிந்தது. இதனைப் பார்த்த உறவினர்கள் நண்பர்கள், இவ்வளவு சுவையாக செய்கிறாயே .. இதனை வியாபாரமாக ஏன் துவங்க கூடாது என ஊக்கப்படுத்தினார்கள். 



என்னால் தனியாக ஒரு உணவு வியாபாரத்தை செய்ய முடியும் என தன்னம்பிக்கையும் சேர்ந்து கொள்ள அப்பொழுது பிறந்தது கலா ஹோம் மேட் ஃபுட்ஸ். 

அதன் பிறகு வீட்டிலேயே துவங்கி பிறகு கடை மற்றும் உற்பத்தி பிரிவு முதலியவை துவங்கினேன். எங்களிடம் வட இந்திய, தென்னிந்திய, பெங்கால் வகை இனிப்புகளும், பாரம்பரிய இனிப்புகளான முறுக்கு, சீடை, அதிரசம் போன்றவையும், காரத்தில் மிக்சர், சேவ் வகைகள் அனைத்தும் செய்து தருகிறோம்.

மைசூர் பாக்கிலேயே சப்போட்டா மைசூர் பாக், நெய் மைசூர் பாக், கேரட் மைசூர் பாக் முதலிய மூன்று நான்கு வகைகள் செய்கிறோம். 
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நாங்கள் சப்ளை செய்கிறோம். நீங்கள் ஆன்லைனிலும் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோவிலும் ஆர்டர் செய்யலாம். 

கலா ஹோம் மேட்ஸ் ஃபுட்
எண் : 78239 89073