செந்தில் நகர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை








கொளத்தூர் செந்தில் நகர் 3வது மெயின் ரோட்டில் உள்ள தெருவிளக்குகள் சரியாக இயங்காததாலும், மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் சரிவர முடிக்கப்படாமல் உள்ளதாலும் மினி பேருந்துகள், வியாபாரிகள் மற்றும்  பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றார்கள். ஆகவே அப் பணிகளை விரைந்து செயல்பட்டு முடித்துத் தருமாறு பெருநகர சென்னை மாநகராட்சி கண்டித்து இன்று காலை செந்தில் நகர் சிக்னல் அருகில் செந்தில் நகர் மற்றும் 200 அடி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வில்லிவாக்கம் அசிஸ்டன்ட் கமிஷனர் மற்றும் ராஜமங்கலம் ஆய்வாளர்,  வியாபாரிகளையும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதால்  நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை விலக்கிக் கொள்வதாக செந்தில் நகர் மற்றும் 200 அடி அனைத்து வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

படங்கள் : செந்தில் நகர் மற்றும் 200 அடி அனைத்து வியாபாரிகள் சங்கம்