Kolathur Mail • August 2019 Issue • Mpaper Version
விவேகானந்தா நகரில் மரம் நடுதல்
யாவே அன்பின் ஊழியங்கள் மற்றும் அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணப்பிரியா பவுண்டேஷனுடன் இணைந்து கொளத்தூர் விவேகானந்தா நகரில் பல்வேறு இடங்களில் சுமார் 22 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்விற்கு யாவே அன்பின் ஊழியங்கள் நிறுவனர் திரு.ஈஸ்டர் ராஜ் தலைமை தாங்கினார்.
Yahweh Ministries Tree Planting
Krishnapriya foundation
Vivekananda Nagar Kolathur
விவேக் நகர் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத முருகன் ஆலய சங்காபிஷேகம்
கொளத்தூர் விவேக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத முருகன் ஆலய ஆடி கிருத்திகை சங்காபிஷேகம் கடந்த ஜுலை மாதம் 26ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
காலை ஹோமம், 108 சங்கு அபிஷேகம், மகா தீபாரதனை துவங்கி மாலை 5 மணியளவில் 3ம் ஆண்டு சுவாமி திருவீதி உலா வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
Kolathur Vivek Nagar Murugan Temple Sangu Abishekaga
நீர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி
கொளத்தூர் அஞ்சுகம் நகரில் உள்ள ‘பிரைய்ன் ஓ பிரைய்ன்’ கல்வி நிறுவனம் சார்பில் கடந்த ஜுலை 28 அன¢று காலை நீர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சுமார் 40 மாணவர்கள் உள்ளிட்ட மொத்தம் 60 பேர் இந்த பேரணியில் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை தாங்கி ஆர்வமுடன் சென்றனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணித்த இவர்களுடன் அஞ்சுகம் நகர் குடியிருப்போர் நலச்சங்கமும் இணைந்திருந்தது.
Water conservation awarness rally
Brain O Brain Kolathur Anjugam Nagar
கொளத்தூர் மெயில் வாசகர்களின் அத்திவரதர் தரிசன அனுபவம்
40 வருடங்களுக்கு ஒருமுறை தரிசிக்க முடிகிற அத்திவரதரை பல்வேறு விதமான அனுபவங்களுடன் தரிசனம் மேற்கொண்ட நமது வாசகர்களிடம் அவர்களது அத்தி வரதர் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கொளத்தூர் மெயில் வாட்ஸப் ஸ்டேட்டஸில் அழைப்பு விடுத்திருந்தோம். அதற்கு விருப்பம் தெரிவித்த நமது சில வாசகர்களின் அனுபவங்கள் இதோ!
பிரசன்னா, பிரவீன்
சீனிவாசா நகர், கொளத்தூர்
நள்ளிரவு 2.30 மணிக்கு பைக்கில் கொளத்தூரில் இருந¢து கிளம்பி அதிகாலை 4.30 மணிக்கு காஞ்சிபுரத்தை அடைந்தோம். அந்த நேரத்திலும் மாபெரும் மக்கள் வௌ¢ளம் இருந்தது. பைக் பார்க் செய்ய சிரமப்பட்டு ஒரு இடம் கண்டுபிடித்தோம். 5 மணிக்கு தரிசன வரிசையில் நின்றோம். உள்ளூர் மக்கள் பலர் ஆங்காங்கே நீர்மோர், காலைச் சிற்றுண்டிகள் வழங்கியதைக் காண முடிந்தது. காலை சுமார் 10 மணியளிவில் அத்திவரதர் தரிசனம் கிடைத்தது. ஒருமுறை கண்டு நிறைவுறாமல் சிலநாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை சென்று நின்ற கோலத்திலும் அத்திவரதரை தரிசித்தோம்.
பரிமளா
விவேக் நகர், கொளத்தூர்

நான் எனது கணவர், எங்கள் குடும்ப நட்பு மூவரும¢ இரவு 2 மணிக்கு கிளம்பி 3.15க்கு காஞ்சிபுரத்தை அடைந்தோம். 3.45க்கு வரிசையில் நிற்க ஆரம்பித்து காலை 11 மணிக்கு அத்திவரதர் தரிசனம் பெற்றோம். 4 மணிக்கு சென்னை வந்தடைந்தோம். உட்கார இடம் இல்லாத வசதிக்குறைவைத் தவிர்த்து, அவ்வளவும் நேரம் வரிசையில் நின்ற வலி எல்லாம் அத்திவரதர் தரிசனம் பெற்ற உடன் மறைந்தது. நிறைவான திருப்தியுடன் மீண்டும் வீடு வந்தோம்.
டாக்டர் சங்கீதா
சுவாமி நகர், கொளத்தூர்

நான் எனது மகன்களுடன் சென்றிருந்தேன். நாங்கள் சென்ற அன்று விஐபி வரிசையில் அவ்வளவு கூட்டம் இல்லாததால் 15 நிமிட நேரத்திலேயே தரிசனம் கிடைத்தது. துளசி தீர்த்தம் நறுமணம் முதற்கொண்டு வித்யாசமான அனுபவம். வரதா என்றால் அனைத்து வரத்தையும் தா என நாம் கேட்கக் கூடியவர். பிரம்மர் அத்திவரதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு. அத்திவரதர் பாதம் முதல் உச்சி வரை மிகத் தெளிவாக தெரிந்தது. பிரம்மாண்டமான அமைப்பில் நிறைவான தரிசனம் எங்களுக்கு கிடைத்தது. இன்னும் அந்த பிரமிப்பு நீங்கவில்லை. மீண்டும் எனக்கு இந்த வாய்ப்பு வருமா தெரியவில்லை. ஆனால் எனது மகன்களது தலைமுறைக்கு இது நீங்கா நினைவாக இருக்கும்.

Subscribe to:
Posts (Atom)