வேலவன் நகர் மெயின் ரோடில் அமைந்துள்ள கலா ஹோம் மேட் ஃபுட்ஸ் கடையில் பல வகையான தென்னிந்திய மற்றும் வட இந்திய இனிப்பு வகைகள் கிடைக்கிறது. இவர்களது ஸ்பெஷல் என்னவென்று அறிய இதன் உரிமையாளர் திருமதி.சந்திரகலா கணேஷ் அவர்களுடன் உரையாடினோம்.
“கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் வெறும் தேங்காய¢ லட்டு உடன் ஆரம்பி¢த்தோம். பிறகு தென்னிந்திய இனிப்பு வகைகளை செய்யத் துவங்கினோம். தற்போது எங்கள் கடையில் பல வகையான தென்னிந்திய மற்றும் வட இந்திய இனிப்பு வகைகள் கிடைக்கின்றது. வெல்லம் கொண்டு செய்யப்படும் ஆர்கானிக் இனிப்பு வகைகள் கூட உண்டு. எங்கள் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் உணவுப் பொருட்கள் அனைத்தும் டால்டா இல்லாமல் செய்யப்படுவது எங்கள் சிறப்பம்சம் ஆகும்.
எங்களிடம் சிறப்பாக, கருப்பு எள் லட்டு, ராகி லட்டு, கருப்பு உளுந்து லட்டு, பாசிப் பருப்பு லட்டு முதலியனவும் கிடைக்க¤ன்றது. கார்பன் ஏற்றப்படாத பாதாம், எலுமிச்சை, மின்ட் வகை குளிர்பானங்களும் இங்கு உண்டு.
தற்போது பாரம்பரிய வகைகளான அதிரசம், சீடை, தட்டை, கை முறுக்கு ஆகியனவும் தருகிறோம். விழாக்கள், பண்டிகைகளுக்கான ஆர்டர்களும் சிறப்பான முறையில் செய்து தருகிறோம்.” என்றார்.
சிறிய கடை என்றாலும் சிறப்பான தரம் ஒன்றே குறிக்கோள¢ என இயங்கி வரும் இவர்களை வாசகர்கள் 7823989073 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Kala Home Made Foods - Velavan Nagar, Kolathur