கொளத்தூர் மெயில், மார்கழி சங்கமம் எனும் இசை, நாட்டிய நிகழ்ச்சியை கடந்த ஜனவரி 5ம் தேதி நடத்தியது. இந்நிகழ்வில் கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த இசைப் பள்ளிகள், நடனப் பள்ளிகள் மற்றும் அகொடெமிக்கள் பங்கேற்றன.
வசந்தம் ஆர்ட்ஸ் அகாடெமி, விவேகானந்தா மெயின் ரோடு, சாய் சங்கரா அகாடெமி டீச்சர்ஸ் காலனி, சித்ரமயா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ், கடப்பா ரோடு, விரிட்டி அகாடெமி, விவேகானந்தா மெயின் ரோடு, உத்கிதா ஆர்ட்ஸ் அகாடெமி, பாபா நகர், வில்லிவாக்கம், சிவா கலா நர்த்தனாலயா ஆகிய ஆறு இசை, நடன பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது சங்கீத, நாட்டிய கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
கடப்பா ரோடில் உள்ள ஸ்ரீவாரி பார்ட்டி ஹாலில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
அகாடெமி உரிமையாளர்களுக்கும், பயிற்றுனர்கள் மற்றும் பங்கேற்ற மாணவமணிகள் அனைவருக்கும் கொளத்தூர் மெயில் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சென்னையின் மற்ற இடங்களில் நடைபெறும் இதுபோன்ற இசை நிகழ்ச்சியடுத்து கொளத்தூரில் முதன்முறையாக உள்ளூர் செய்தித்தாள் ஒருங்கிணைப்பில் சுற்றுவட்டாரத்தின் இசைப்பள்ளிகள் பங்கேற்க மார்கழி மாதத்தில் ஒரு இசை சங்கமம் நிகழ்வு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
Kolathur Mail Margazhi Sangamam